Published On: Friday, March 02, 2012
அஜீத்தை புகழும் பார்வதி ஓமனக்குட்டன்

அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா 2 படத்தின் டிரெய்லர் மார்ச் மாதம் 15-ம் தேதியும் பாடல்கள் மார்ச் மாதத்தின் கடைசியிலும் வெளியாகிறது. பில்லா 2-ல் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் பார்வதி ஓமனக்குட்டனுக்கு தமிழில் இது தான் முதல் படம்.
தனது முதல் படத்தில் அஜீத்துடன் நடித்துள்ள அனுபவம் பற்றி பேட்டியளித்த பார்வதி ஓமனக்குட்டன் “ நான் இந்தியில் சில படங்கள் நடித்துள்ளேன். அந்த படங்களிலிருந்து நான் பெற்ற அனுபவம் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால் பிரபலமாவது எளிது என்பது தான்.
நான் நினைத்தது போல் தமிழில் என் முதல் படத்திலேயே அஜீத் சாருடன் இணைந்துவிட்டேன். அவர் மிகவும் பண்பானவர். எல்லோரையும் சமமாக மதிப்பவர். அவருடன் நடித்ததிலிருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டேன்” என்று கூறினார்.