எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 02, 2012

`காதல் தீவு' படத்தில் வில்லன் மனோஜ்

Print Friendly and PDF


`அரும்பு மீசை குறும்பு பார்வை' படத்தை டைரக்டு செய்தவர், வெற்றிவீரன். இவர் அடுத்து, `காதல் தீவு' என்ற படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.

`அழகி' படத்தில் சிறு வயது பார்த்திபனாக அறிமுகமான ராம்சரண், இந்த படத்தின் கதை நாயகன் ஆகிறார். ஆஸ்கார் விருதுகளை அள்ளிய `ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் சிறு வயது நாயகியாக நடித்த தான்வி லோன்கர், இந்த படத்தின் கதை நாயகி ஆகிறார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதி, இந்த படத்தின் மூலம் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில், சுஜா வாருணி நடிக்கிறார். மாஸ்டர் கனல் கண்ணன், உதயாராஜ், `நர்த்தகி' நாயகன் அஸ்வின், `நாதஸ்வரம்' முனிஸ்ராஜா ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.

மிதுன் ஈஸ்வர் இசையமைக்க, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். யு.எம்.இந்திரஜித், ரவி கதிரேசன் ஆகிய இருவரும் வசனம் எழுதுகிறார்கள். யு அண்ட் மீ புரொடக்ஷன்ஸ் தினேஷ் சாந்தி வழங்க, முன்னாள் பள்ளி தோழர்கள் சிலர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

காலம் மனித வாழ்வில் ïகிக்க முடியாத மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறது. அதே காலம், மனித வாழ்வில் காதல் என்கிற கருப்பொருளை ஒரு நூழிலை அளவு கூட மாற்றவில்லை என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452