Published On: Sunday, March 04, 2012
முதல் பைனல்; இலங்கையை சமாளிக்குமா அவுஸ்திரேலிய அணி

சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு தொடரின் முதல் பைனல் இன்று பிரிஸ்பேனில் நடக்கிறது.
இதில் லீக் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற இலங்கை அணியை, அவுஸ்திரேலிய அணி சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய முதல் பைனலில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, விளையாடி வருகிறது.
சற்றுமுன்பு வரை அவுஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 30 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 10 வது ஓவரில் மழை பெய்த காரணத்தினால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது.