எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 04, 2012

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையற்ற விடயம்

Print Friendly and PDF


வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் போதுதான் முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையாக இருந்தது. கேட்டதில் நியாயமும் இருந்தது. ஆனால், இன்று இரு மாகாணங்களும் பிரிந்து தனித்தனியாக இயங்கு வதால் முஸ்லிம் தனி அலகு என்ற தேவை இல்லாது போய்விட்டது. இப்போதும் எவராவது இதுபற்றிப் பேசுவார்களேயானால் அது அவர்களது அரசியல் தேவைகளுக்காகவே என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வு ஒன்று காணப்படும் நிலையில் இதனை ஒரு பிரச்சினையாக எழுப்பி அரசியல் இலாபம் தேட எவரும் முனையக் கூடாது. இரு மாகாணங்களும் இணைந்திருந்தபோது தமிழ் மக்களது விகிதாசாரம் அதிகமாக இருந்தது. அதனால் அவர்கள் கேட்டதில் நியாயம் இருந்தது. கட்டாயம் கொடுத்திருக்கவே வேண்டும்.

ஆனால், இன்று கிழக்கு தனியாக உள்ளது. இங்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக சகோதரர்களாக வாழ்கின்றனர். இவர்களைப் பிரிக்க எவரும் அரசியலைப் பயன்படுத்தக் கூடாது என்பதே வேண்டு கோளாகும் எனவும் சந்திரகாந்தன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தனது இந்த நிலைப்பாட்டை கிழக்கிலுள்ள சகல முஸ்லிம் தலைவர்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்வர் எனத் தெரிவித்த அவர், தனது நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு சகலவிதமான விடயங்களிலும் சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழருக்கு மட்டுமான ஒன்றல்ல. அது தமிழ் பேசும் முஸ்லிம்களையும் அரவணைத்த ஒரு விடயமே. எனவே இருதரப்பும் இணைந்தே ஒற்றுமையாகத் தீர்வினைப் பகிரவேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக ஒரு தரப்பிற்கு மறுதரப்பு எவ்வகையிலும் ஈடுபடக்கூடாது எனவும் சந்திரகாந்தன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452