Published On: Sunday, March 04, 2012
எனக்கும் பிரச்சினை வந்தது - சோனியா அகர்வால்

”ஓரு நடிகையின் வாக்குமூலம்” என்ற படத்தை அடுத்து, சோனியா அகர்வால் இயக்குநர் ராஜ் பிரபு இயக்கத்தில் அச்சம் என்ன என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் கதை முழுவதும் பெண்களின் பிரச்னையை மையமாக கொண்ட கதையாகும்.
இதுக குறித்து சோனியா அகர்வால் கருத்து தெரிவிக்கையில், பெண்களின் பிரச்னையை மையமாகக் கொண்ட கதைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
ஏனென்றால் பெண்கள் தனது வாழ்க்கையிலும், வெளியிடங்களிலும் நாளுக்கு நாள் அதிகமான பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்னைகளை சந்தித்த பெண்களில் நானும் ஒருவர் என்று கூறியுள்ளார்.