Published On: Thursday, March 08, 2012
அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா
(இன்ஷாப் முஹம்மட்)
சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி மைதானத்தில் அதிபர் ஹபீறா சலீம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக கிழக்க மாகாண வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் கிராமிய மின்சார வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து சிறப்பித்தார்.
கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.அஸீஸ்மீடின், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.தம்பிக்கண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் உட்பட அதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இவ் இல்ல விளையாட்டு விழாவில் மர்வா-பச்சை இல்லம், அறபா-நீல இல்லம், சபா-மஞ்சள் இல்லம் ஆகிய மூன்று இல்லங்கள் போட்டியிட்டன. இவற்றில் 237 புள்ளிகளை பெற்று அறபா-நீல இல்லம் முதலாம் இடத்தையும், 224 புள்ளிகளை பெற்று சபா-மஞ்சள் இல்லம் இரண்டாம் இடத்தையும், 168 புள்ளிகளை பெற்று மர்வா-பச்சை இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
.jpg)
.jpg)