Published On: Thursday, March 08, 2012
சம்மாந்துறையில் 117 குடும்பங்களுக்கு காணி உத்தரவுப்பத்திரம் வழங்கல்
(இன்ஷாப் முஹம்மட்)
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரவில் காணி உத்தரவுப்பத்திரம் இல்லாதிருந்த 117 குடும்பங்களுக்கு எல்.டீ.ஓ. காணி உத்தரவுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காணி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றாபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், தலைமை சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.இல்லியாஸ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், காணிப்பிரிவு உத்தியோகத்தாகள் பலரும் கலந்து கொண்டனர்.