Published On: Sunday, March 04, 2012
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்துக்கு வந்த 40 இலங்கையர்கள் பிடிபட்டனர்

கச்சத்தீவு செல்வதற்காக தமிழக பக்தர்களுடன் கலந்து வந்த 40க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சோதனையின்போது பிடிபட்டனர். இவர்களை புலனாய்வு துறையினர் விசாரித்து திருப்பி அனுப்பினர். வர்த்தக பயன்பாட்டிற்காக பொருட்கள் கொண்டு செல்ல தடை இருந்தபோதும் பக்தர்கள் கொண்டு வந்த கைலி, போர்வை, கொலுசு, பொம்மைகள், பீடி, சிகரெட்- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கச்சைதீவூ அந்தோனியார் ஆலய விழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 140 படகுகளில் 3800க்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சத்தீவிற்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை யாழ்பாணம் மறைமாவட்ட நிர்வாகம் சார்பில் கச்சத்தீவு அந்தோனியார் கோயில் விழா நேற்று கொடியேற்றம் தொடங்கி சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று தேர்பவனி நடக்கிறது. இதற்காக நேற்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை 140 படகுகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவை சேர்ந்த 3800க்கும் மேற்பட்ட பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு சென்றனர். பக்தர்களுக்கு பாதுகாப்பாக இந்திய கடற்படை கடலோர காவல்படையினரும் உடன் சென்றனர்.