Published On: Monday, March 05, 2012
ஹோட்டலில் நடந்தது என்ன? குமுறும் ப்ரியாமணி

குங்குமச் சிவப்பாகியிருக்கிறார் ப்ரியாமணி. இது வெட்கத்தால் வந்த பூரிப்பல்ல, கோபத்தால் வந்த கொக்கரிப்பு. தெலுங்கு, மலையாளம் என்று அந்தப்பக்கமாகவே சுற்றிக் கொண்டிருக்கும் ப்ரியாமணிக்கு சென்னையில் சூறாவளியாக சுற்றிக் கொண்டிருக்கும் 'அந்த விஷயத்தை' பற்றி காதில் விழவேயில்லை போலிருக்கிறது.
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நாலு இளைஞர்களிடம் அவர் சிக்கிக் கொண்டார் என்று வெளியான தல்லவா? அதைப்பற்றிய குமுறல்தான் இது! சிரமப்பட்டு அந்த வம்பளப்பை ப்ரியாமணியின் காதில் போட்டு விட்டது குங்குமம் வார இதழ். அவர்களிடம்தான் பொறிந்து தள்ளி யிருக்கிறார் ப்ரியாமணி. என்னவென்று?
இல்லாத விஷயத்தை இருப்பது போல எழுதிய அந்த நிருபரோட போன் நம்பரை மட்டும் கொடுங்க. மற்றதை நான் பேச வேண்டிய விதத்தில் பேசிக்கிறேன். ஒரு நடிகைன்னா என்ன வேணா எழுதலாமா? நான் சென்னைக்கு வந்தே பல நாளாச்சு. ஐதராபாத்ல ஃபைனல்ஸ் மேட்ச் முடிச்ச மறுநாளே நான் கொச்சிக்கு வந்துட்டேன். என்னோட சிஸ்டர் ஃபேமிலி இங்க இருக்கு. அவங்களோடதான் நான் இருந்தேன். உண்மை இதுதான். நான் சென்னைக்கு வரவும் இல்ல. எந்த பார்ட்டியிலும் கலந்துக்கவும் இல்ல.
ப்ரியாமணியின் இந்த பதில் ஒரு மாபெரும் சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கிறதா, அல்லது மர்மத்தை கிளற வைக்கிறதா? எது எப்படியோ, தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைப்பவர்களுக்கு மூக்கு பத்திரம் என்று எச்சரித்திருக்கிறார் ப்ரியாமணி.
ரொம்ப சில்லியான மேட்டர் அது