Published On: Tuesday, September 06, 2011
காதலனை கரம் பிடிக்கிறார் ரீமாசென்

"மின்னலே" படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரீமாசென். தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
ரீமாசென்னுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. மணமகன் பெயர் ஷிவ் கரன்சிங். டெல்லியில் ஹோட்டல் நடத்துகிறார். ரீமாசென்னும் ஷிவ்கரனும் நீண்ட நாட்களாக ஒன்றாக சுற்றினார்கள். விருந்து நிகழ்ச்சிகளிலும் சேர்ந்து பங்கேற்றார்கள். ஷிவ்கரன் தனது நண்பர் என்றும் அறிமுகப்படுத்தி வந்தார். தற்போது முதல் தடவை இருவருக்குமான காதலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம். திகதி இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணத்துக்கு பின் கணவருடன் டெல்லியில் குடியேறுவேன். டெல்லி எனக்கு மிகவும் பிடிக்கும்.