Published On: Wednesday, September 28, 2011
3 கார்களைத் தாண்டி நீளம் பாய்ந்து சாதனை

நீளம் பாய்தல் போட்டியில் சம்பியனான ஜே.ஜே. ஜெகெட் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாதையில் புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். சமாந்தரமாக 3 கார்களை நிறுத்திவிட்டு அதற்கு மேல் போடப்பட்டுள்ள பாலத்தினை தாண்டி நீளம் பாய்ந்தள்ளதால் இந்த புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நான் எப்போதும் வேடிக்கையான வழியிலேயே திறமைகளை நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே நான் இவ்வாறு 20 நீளத்தை 3 கார்களை வைத்துக்கொண்டு தாவினேன் என்று ஜே.ஜே. ஜெகெட் அங்கு தெரிவித்தார்.
ஜே.ஜே. ஜெகெட் தற்போதைய இங்கிலாந்து அதிக நீளம் பாயும் சம்பியனாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரது சம்பியன்சிப் நீளமாக 8.04 மீற்றர் (26 அடி) உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.