Published On: Wednesday, September 28, 2011
அதிகநாள் வாழும் இரட்டைத்தலை பூனை


அண்மையில இரட்டைத் தலை பூனை ஒன்று தனது 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இதன் பெயர் Frankenlouie. இதுவே தற்போது உலகில் வித்தியாசமான பிறப்புடன் அதிகநாள் உயிர்வாழ்ந்த பூனையாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பூனைக்கு 3 கண்கள், 2 வாய் மற்றும் 2 மூக்குகள் உள்ளன. இவை பிறவியிலேயே இவ்வாறுதான் இருந்துள்ளது.
இது இரண்டு பூனைகள் அல்ல. ஒரு பூனையில் இரட்டைத் தலையில் ஒரு மூளை மட்டுமே இதன் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 2 கண்களும் சாதரணமாக செயற்படுகின்றன. மூன்றாவது கண் மத்தியில் இருப்பது செயலிழந்து காணப்படுகி்ன்றது.
அதன் உரிமையாளர் மார்ட்டியுடன் இத வாழ்ந்து வருகின்றது. இந்தப் பூனைகூட "அதிகநாள் உயிர் வாழ்ந்த அசாதரண பூனையாக" தற்போது கின்னஸில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.