Published On: Wednesday, September 21, 2011
இனி சாரதி இல்லாமல் வாகனம் ஓட்டலாம்

வாகன சாரதி இல்லாமல் வாகனம் ஓட்டமுடியுமென்று பிறீ பல்கலைக்கழகம் நிரூபித்துள்ளது. இதனை பேச்சு, பார்வை, இயக்கம் மூலம் கட்டுப்படுத்தி வாகனம் ஒட்ட முடியும். எதிர்காலத்தில் வீதிகள் முழுவதும் கணினி மயப்படுத்தப்பட்டுவிடும். அப்போது இதன் உதவி சேவை நமக்குத் தேவைப்படும் என்கின்றனர்.
பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜேர்மன் தலைநகர் சுற்றி இந்த வாகனத்தைப் பரிசோதனை செய்தனர். இதன் சுயமான போக்குவரத்தினை ஒரு கணினி, மின்னணு மற்றும் பெட்டி, முன்னால் ஒரு கமெரா, கூரை முன் மற்றும் பின்பக்க பம்ப்பர்களைச் சுற்றி லேசர் ஸ்கேனர்கள், ஒரு துல்லியமான செயற்கைக்கோள் ஊடுருவல் முறையானது உள்ளிட்ட சாதனங்கள் ஒரு சிக்கலான கோர்வைகள் ஆள்கின்றன.

வாகனத்தைச் சுற்றி 70 மீற்றருக்கு வீதியில் பாதசாரிகள், கட்டிடங்கள், மரங்கள், கார்கள் கவனித்து இவ்வாகனம் செல்லும். அத்துடன் போக்குவரத்து விளக்குகள் மேலே சிவப்பு அல்லது பச்சை மற்றும் அதற்கேற்ப போக்குவரத்து விதிகளைப் பேணியும் செல்லும்.
விஞ்ஞானிகள் அயராத 4 ஆண்டுகளின் பயனாக இச்சிறப்பு தொழில்நுட்பத்தினை கண்டுபிடிக்க $ 551,800 டொலர்கள் செலவாகியது. இவ்வகையான கார்கள் எதிர்காலத்தில் எமது சந்தைக்கு வந்தால் வீதி விபத்துக்களைக் குறைக்க ஏதுவாக அமையும்.
இன்னொரு காலம். மனிதன் வாழத்தேவையில். ஒரு காட்சிப் பொருளாக மட்டும் இருந்தால் போதும். மற்ற எல்லா விடயங்களையும் மெசின்களை பார்த்துக் கொள்ளும். அக்காலமும் வெகு தொலைவில் இல்லை.