எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, September 15, 2011

தினக்குரல் ஆசிரியர்பீடத்துக்கு இலவசமாக சம்பளம் வழங்க நிறுவுநர் உறுதி

Print Friendly and PDF


வீரகேசரியின் நிர்வாகத்தின் கீழுள்ள ஏஷியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிட்டட்டிலிருந்து கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் வெளிவந்த தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த 25 ஊழியர்கள் புதன்கிழமை காலை அலுவலகத்துக்கள் நழையவிடாது நிர்வாகத்தினரால் தடுத்த நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 

தினக்குரலின் செய்தி ஆசிரியர், தினக்குரல் வார வெளியீடு பிரதம ஆசிரியர், உதவி செய்தி ஆசிரியர், சிரேஷ்ட உதவி ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். நிர்வாகத்தினரால் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து இந்த ஊடகவியலாளர்கள் தமது நிலை குறித்து பொலிஸ் திணைக்களத்திடம் முறையிட்டனர். அத்துடன் கொழும்பு 15இல் உள்ள மோதரை தொழில் நிலையத்திடமும் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட தினக்குரல் ஆசிரிய பீடத்தினரை தொழில் திணைக்களத்தின் கொழும்பு வடக்கிற்கு பொறுப்பான தொழில் ஆணையாளர் விக்கிரமசிங்க விசாரரைணக்கு அழைத்திருந்தார். அத்துடன் நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்தபோது அவர்கள் சமூகம் கொடுக்கவில்லை. இதனையடுத்து தினக்குரல் ஆசிரியர் பீடத்தினரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர் வியாழக்கிழமை 10.30 மணிக்கு நிர்வாகத்தினரை கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பணித்துள்ளார்.


அத்துடன் தொலைபேசி ஊடாக தினக்குரல் நிர்வாக இயக்குநர் P.கேசவராஜாவைத் தொடர்பு கொண்ட உதவி ஆணையாளர் தினக்குரல் ஊழியர்களிடம் இராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்குமாறு கோரமுடியாது எனத் தெரிவித்ததுடன் ஊழியர்களை உடனடியாக அலுவலகத்தக்குள் அனுமதிக்குமாறு கூறியபோதும் P.கேசவராஜா அதற்கு மறுத்துவிட்டார். ஏனெனில் இது வீரகேசரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறிய அவர் அவர்களின் முடிவின்படியே  தன்னால் செயற்படமுடியும் எனவும் கூறிவிட்டார்.

இலங்கையில் முதன்முதலாக ஒரு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் நிர்வாகத்தினரால் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள பல ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தமது பூரண ஆதரவையும் தினக்குரல் ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.

தினக்குரல் ஊடகவியலாளர்கள் மீண்டும் அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சிங்கள ஊடகவியலாளர்கள் உட்பட பொது அமைப்பபுகள் பலவும் முன்வந்துள்ளன. இச்சட்டவிரோதமான நடவடிக்கைக்கு இடம்கொடுத்தால் இலங்கையின் ஊடகவியலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே அமையும்.


இதையடுத்து இன்று வியாழக்கிழமை இரு தரப்பினருடனும் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு வருமாறு உதவி தொழில் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய தினக்குரல் ஆசிரியர்பீட உத்தியோகத்தர்கள் கொழும்பு தொழில் திணைக்களத்திற்கு ஆஜரானபோது அங்கு விசாரணைகள் இடம்பெற்றது. 

அங்கு தினக்குரல் நிறுவுநர் எஸ்.பி. சாமி அவர்கள் தினக்குரல் ஆசிரியர்பீட உத்தியோகத்தர்களை புளூமென்டெல் தினக்குரல் அச்சகத்தில் சும்மா வந்திருக்குமாறும் அவர்களுக்கு சம்பளத்தொகையை வழமைபோல தருவதாகவும் கூறியுள்ளார். தொழில் திணைக்களம் எதிர்வரும் 21ஆம் திகதி இவர்களுக்கான காலக்கெடுவைக் கொடுத்துள்ளதாகவும் எமது துருவம் இணையத்தளத்‌துக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452