Published On: Wednesday, October 19, 2011
எயிட்ஸ் பற்றிய சந்தேகங்களும் பதில்களும்

முத்தமிடுவதால் எயிட்ஸ் பரவுமா?
உமிழ் நீரில் வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவு வதற்கான சந்தர்ப்பம் குறைவா னாலும் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும்போது ஒருவருக்கு வாயினுள்ளே காயங்களோ சிறிய இரத்தக் கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவலாம்.
எயிட்ஸ் உள்ளவர்களோடு சேர்ந்து விளையாடலாமா?
நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, இரத்தத் தொடர்பற்ற எந்த விதத்திலும் எயிட்ஸ் நோயாளியோடு நீங்கள் பழகலாம்.
எயிட்ஸுக்கு மருந்துகள் உள்ளனவா?
ஆம். இதை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வாழ்க்கைக் காலத்ததை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த மருந்துகள் உதவும்.
புதிதாக இரத்தம் ஏற்றுவதன் மூலம் எயிட்ஸ் பரவலாமா?
ஆம். ஆனாலும் அனைத்து வைத்தியசாலைகளிலும் இப்போது இரத்தம் பரிசோதிக்கப்பட்ட பின்பே ஏற்றப்படுவதால் அதற்காக அஞ்சத் தேவையில்லை.
ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவலாமா?
ஆம். இதன் போதுதான் எயிட்ஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் அதிகம்.
தலைமுடி வெட்டும்போது எயிட்ஸ் தொற்றலாமா?
ஒரு பிளேட் பல பேருக்குப் பாவிக்கப்ப்படும்போது தவறுதலாக சிறிய வெட்டுகள் ஏற்பட்டால் எயிட்ஸ் தொற்றலாம்.
நீங்கள் தலைமுடி வெட்டும்போது உங்களுக்காக புது பிளேட் போடப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பச்சை குத்தும்போது எயிட்ஸ் தொற்றலாமா ?
ஆம். ஒரு உபகரணம் பல பேருக்கு பாவிக்கப்படுவதால் தொற்ற சந்தர்ப்பம் உள்ளது.
எயிட்ஸ் நோயாளி தாய்ப்பால் கொடுக்கலாமா?
இல்லை.