Published On: Wednesday, October 19, 2011
கிழக்கில் இராணுவ வீரர்களுக்கு வீடுகள்

அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 14 வீடுகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (19.10.2011) புதன்கிழமை தெரிவு செய்யப்பட்ட இராணுவ வீரர்களிடம் கையளித்தார். வீடுகள் அற்ற இராணுவ வீரர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் 'நமக்காக நாம் - அபிவெனுவன் அபி' திட்டத்தின் 6ஆவது கட்டமாக இவ்வீடுகள் வழங்கப்பட்டன.
அம்பாறை திவுலான வித்தியாலயத்தில் இன்று காலை இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் இராணுவ வீரர் கே.எம்.ஆர். ஜயரத்னவுக்கு உரிய வீட்டை ஜனாதிபதி கையளித்தார். அத்துடன் ஏனைய இராணுவ வீரர்களுக்குரிய வீடுகளின் சாவிகளையும் இந்த வைபவத்தில் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்கீழ் இதுவரையில் 151 வீடுகள் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திவுலான வித்தியாலயத்தின் மாணவ மாணவியருக்கான பாடசாலை உபகரணங்களையும் ஜனாதிபதி இன்று வழங்கினார்.