Published On: Tuesday, October 18, 2011
360 பாகையில் படமெடுக்கும் கமெரா

புகைப்படத்துறையில் தற்போது புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக 360 பாகையில் சுழற்சி முறையில் அழகிய புகைப்படங்களை எடுக்கக்கூடியவாறு ஒரு மாறுபட்ட கமெரா தயாரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான கமெரா வடிவத்திலிருந்து மாறுபட்டு ஒரு பந்துபோல இருக்கின்றது.
பேர்லின் தொழில்நுட்பவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இப்பந்துக் கமெராவில் 36 நிலையான கமெராக்காள் உள்ளன. இவை 2 மெகாபிக்சல் மொபைல் போனின் கமெராவை ஒத்தது.
இந்தப் பந்துக் கமெராவை மேலே எறிந்துவிட்டால் அது உச்சத்தை அடைந்தபின்னர் அனைத்து திசைகளிலும் புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறது. பின்னர் 36 படங்களையும் ஒன்றுசேர்த்து ஒரு 360 பாகையில் ஒரு புகைப்படமாகக் காட்டுகின்றது.