Published On: Thursday, October 06, 2011
போதையிலிருந்து காப்பாற்றுங்கள்


கொழும்பு நகரத்தைப் போதைப் பொருளிலிருந்து பாதுகாக்குமாறும் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை உடனே முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். ௦வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற மதுவரித் திணைக்களத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் காரணமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இவர்களை இதிலிருந்து மீட்க, மதுவரி திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால், கொழும்பு மாநகரிலே போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகம் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக புறக்கோட்டைப் பகுதியில் அதிகளவிலானோர் அப்பாவி பொதுமக்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்கின்றனர். இதன் மூலமாக தங்களது போதைக்கான செலவை பூர்த்திசெய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.