Published On: Thursday, October 06, 2011
தயாசிறி ஜயசேகர எம்.பி. வெளியேற்றம்


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர வியாழக்கிழமை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளால் இவர் பாராளுமன்றிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அத்துடன் அவரது உரையும் பாராளுமன்ற ஹன்சார்டிலிருந்து நீக்கப்பட்டது.
தயாசிறி ஜயசேகர வெயியேற்றப்பட்டதையடுத்து நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் பயன்படுத்தப்படுகின்ற தொலைபேசி வலையமைப்புக்கள் ஊடாக இடம்பெறும் உரையாடல்களைக் கேட்டல் அல்லது பதிவுசெய்வதற்கான உபகரணம் அரசாங்கத்தினால் அல்லது வேறு நிறுவனத்தினால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தொலைத் தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய உரையாடல்களை ஒட்டுக்கேட்டல் அல்லது பதிவு செய்தல் போன்ற வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டார்.