எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 19, 2011

பித்தப்பைக் கற்களின் பாதிப்புக்கள்

Print Friendly and PDF


பித்தப் பைக்கற்கள் (Gallstone)


பித்தப் பை (Gall bladar) எனப்படுவது எமது உடலிலே பித்தத்தை (bile) தற்காலிகமாக சேகரிக்கும் உறுப்பாகும்.

இவ்வாறு பித்தைப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்து உணவு சமீபாட்டிற்கு உதவும்.

பித்தத்தில் உள்ள சில பதார்த்தங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம்.
இவை பொதுவாக பித்தப் பைக் கற்கள் எனப்படும்.

இந்தக் கற்கள் பித்தப் பையினுள்ளே காணப்படலாம் அல்லது பித்தக் குழாயினுள்ளே (பித்தத்தை பித்தப் பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளே ) காணப்படலாம்.

பித்தப் பைக் கற்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்.
  • பெண்கள் 
  • உடற் பருமனானவர்கள் 
  • நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 

பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோரிலும் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அதாவது பித்தப்பைக் கற்கள் உள்ளவர்களில் சில பேரிலே அது பாதிப்பை ஏற்படுத்த மற்றவர்கள் வாழ்க்கை முழுவதும் சாதாரணமானவர்களாக இருப்பார்கள்.


பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்
  • பித்தப்பைக் கிருமித் தோற்று 
  • பித்தக் குழாய் அடைப்பு 
  • சதையி அலர்ச்சி 

இந்தக் கற்கள் ஏற்படுத்தும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அவற்றினால்
ஏற்படும் பாதிப்புக்களும் வேறுபடலாம்.

பித்தப் பைக் கற்களினால் ஏற்படும் வலியானது வயிற்றின் வலது பக்க மேல் மூலையில் ஏற்படும். இந்த வலியானது தோற்பகுதிக்கு பரவிச் செல்லுவது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தும்.

பித்தப்பைக் கிருமித் தோற்று ஏற்பட்டவர்களில் காய்ச்சலும் ஏற்படும்.

பித்தப் பைக் குழாயில் பூரணமான அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு பித்தப் பொருளான பிலிரூபின்(bilirubin) அதிகரித்து யோண்டீஸ் (Jaundice) கண் மற்றும் உடல் மஞ்சள் ஆகும் என்ற நிலையம் ஏற்படும்.


மருத்துவம்

பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படுவதில்லை.

வலி அல்லது வேறு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கு எந்தவிதமான மருத்துவமும் தேவை இல்லை.

பித்தப்பை கிருமித் தொற்று, அல்லது மீண்டும் மீண்டும் வலி ஏற்படுபவர்களுக்கு பித்தப்பைக் கற்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கான சத்திர சிகிச்சையின் போதுகற்களோடு சேர்த்து பித்தப் பையும் அகற்றப்படும்.

பித்தப்பைக் குழாயின் கீழ்ப் பகுதியில் கல் உள்ளவர்களுக்கு நேரடியாக கல் மட்டுமே அகற்றப்படலாம் . இது வாய் வழியின் ஊடாக கமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி செய்யப்படலாம்.

பித்தப்பை அகற்றபடும் சத்திர சிகிச்சையானது இப்போது வயிற்றை வெட்டாமல் சிறிய துளை ஏற்படுத்தி செய்யப்படும் லப்பிரஸ்கோபி (Laparascopy) மூலம் இலகுவாக செய்யப்படலாம்.

பித்தைப்பை அகற்றப்பட்ட பின்புகூட ஒருவர் எந்தப் பாதிப்பும் இல்லமால் சாதரணமாக வாழலாம்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452