எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, October 20, 2011

100 பவுண்ட் எடைகொண்ட விதைப்பை

Print Friendly and PDF


அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய வெஸ்லி வாரன் என்பவரின் விதைப்பையில் ஏற்பட்ட நோய் காரணமாக அவரது விதைப்பை 100 பவுண்ட் எடையுடையதாக பிரமாண்டமான முறையில் வீங்கிக் காணப்படுகின்றது. இடுப்புதொடை நரம்பு பாதிக்கப்பட்டமையால் நிணநீர்த்தேக்கமடைந்து இந்த வீக்கம் வந்துள்ளது.

அவரது விதைப்பையில் மேற்பட்ட 100 பவுண்டுகள் எடை திரவம் கொண்டு பருத்துள்ளது. இதனால் அசாதரணத் தன்மையினால் அவருக்கு சாதாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவது கஷ்டமாகவுள்ளது. இதனால் அதைச்சுற்றி ஒரு தலையணையை வைத்துக்கொண்டு திரிகின்றார். அதிகளவான எடையினால் சுவாசிப்பதில் சிரமப்படுகிறார். அவரால் வேலை செய்ய முடியாது. சிறுநீரைக் கட்டுப்படுத்தமுடியாமல் உள்ளது.


வீதியில் செல்லும்போது மக்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கின்றனர். இதனால் இவர் மனம் சோர்வடைந்து காணப்படுகின்றார். இதனால் அதிகளவான நேரத்தை வீட்டிலேயே செலவிடுகிறார். இவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு 1 மில்லியன் பணம் தேவைப்படுகின்றது. 


இப்பணம் என்னிடம் இருந்தால் எல்லோரும்போல் சாதாரணமாக என்னாலும் இருக்கமுடியும். நான் ஒரு ஏழை. தனவந்தர்கள் எனக்கு உதவி செய்தால் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என வெஸ்லி வாரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நீங்களும் வெஸ்லி வாரனுக்கு உதவ விரும்பினால் benefitballsack@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்.

இதோ பாதிக்கப்பட்ட வெஸ்லி வாரனின் வீடியோ துருவம் வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.



Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452