Published On: Saturday, October 22, 2011
ஸ்ருதி ஹாஸன் போய் காஜல் அகர்வால்

தம்மு தெலுங்குப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.க்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பின்னர் திடீரென கழன்று கொண்டார் நடிகை ஸ்ருதி ஹாஸன். அவருக்கு ஹிந்திப்பட வாய்ப்பு வந்தது விடயம் வெளியானவுடனே, ஜூனியர் என்.டி.ஆர்.ஐ பல நடிகைகளிடம் ஓப்பந்தம் கேட்டார். எல்லோரும் மிகவும் பிசியாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் என்.டி.ஆர். காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார். உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் காஜல்.
ஏற்கெனவே நான் வட இந்தியப் பெண் என்று பேசி தெலுங்கு நடிகர் இயக்குநர்களிடம் கெட்டப் பெயர் சம்பாதித்துள்ளார் காஜல். இந்நிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், மீண்டும் தெலுங்கில் ஒட்டிக் கொள்ளலாம் என காத்திருந்தபோது, இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. அதேநேரம் தனக்கு சம்பளமாகமாகப் பெரும் தொகையைக் கேட்டாராம் காஜல். வேறு வழியில்லை என்பதால், கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.