Published On: Saturday, October 22, 2011
சிம்புவுக்கும் சிக்ஸ்பேக் உடம்பா...?

ஒஸ்தி படத்தின் பிரஸ் மீட்டில் சிம்பு, இந்தப் படம் ஒஸ்தி ஆரம்பித்தபோது, படத்தில் சட்டையைக் கழற்றிவிட்டு சிக்ஸ்பேக் காட்டியபடி ஒரு காட்சியில் வரவேண்டும். சல்மான் கான் ஹிந்தியில் அப்படிச் செய்திருந்தார். ஆனால், என்னால் அப்படி முடியாது என சொல்லிவிட்டேன் இயக்குநர் தரணியிடம். காரணம், இந்தப் படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்தால் அடுத்தடுத்து என்னுடைய படங்கள் போடா போடி, வேட்டை மன்னன் ஆகியவற்றின் தொடர்ச்சி கெட்டுவிடும்.
நான் பாட்டுக்கு சாதாரணமா நடித்துக் கொண்டிருந்தபோது, பத்திரிகைகளில் நான் சிக்ஸ்பேக் வைத்து நடிப்பதாக செய்திகள். எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் இந்த செய்தி (அப்டியா!?). உடனே ரசிகர்கள் வேறு பயங்கரமாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கே போனாலும் சிக்ஸ்பேக் பத்தி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. (அது என்ன சிகரெட் பாக்கெட்டா?). சரி அவர்களை ஏமாத்தக் கூடாதே என்பதற்காக நானும் சிக்ஸ் பேக்குக்காக ஒர்க் அவுட் பண்ணேன்.
இப்போது படத்தில் அந்தக் காட்சி அருமையாக வந்துள்ளது. இதுக்கு காரணம் பத்திரிகைகள் எழுதிய செய்திதானே என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது, என்று கூற, நிருபர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வையில், ‘நான் அவனில்லை' என்ற அப்பாவித்தனம் தெரிந்தது.