Published On: Wednesday, October 19, 2011
பாடசாலைகளில் இனி தீடீர் சோதனை

பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சியற்றுக் காணப்படும் பாடசாலைகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக வடமேல் மாகாணண முதலமைச்சர் அதுல விஜயசிங்க தெரிவி்த்துள்ளார்.
பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் வெறுமனே சம்பளத்தை மாத்திரம் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அந்தப் பாடசாலைகளில் பாடங்களைக் முறையாகக் கற்பிப்பதில்லை எனவும் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், சகல வளங்களும் உள்ளடங்கிய பாடசாலைகளிலும் இந்தப் பெறுபேற்றுப் பின்னடைவு காணப்படுவதாகத் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் பாடசாலைகளுக்கு திடீரென விஜயம் செய்து அங்கு நடைபெறும் நடவடிக்கைகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்