Published On: Friday, October 21, 2011
செல்வந்த நாடுகளில் முதலிடத்தில் சுவிஸ்

உலக செல்வந்த நாடு என்ற பெயரைக்கொண்ட நோர்வையை சுவிஸ் முந்திவிட்டதாக நேற்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் செல்வந்த நாடு என்ற பட்டியலில் முதலாம் இடத்திற்கு சுவிஸ் வந்துள்ளது. இரண்டாம் இடத்தில் நோர்வேயும், மூன்றாம் இடத்தில் ஒஸ்ரேலியாவும், நான்காம் இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.
இந்த வருடத்தில் சுவிஸ் பிராங்கின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகவே சுவிஸ் செல்வந்தநாடுகள் பட்டியலில் முதலாம் இடத்திற்கு வந்துள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு சுவிஸ் பிரஜை 4 இலட்சத்து 50 ஆயிரம் சுவிஸ் பிராங்க் வைத்திருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த சம்பளம், சுவிஸ் பிராங்கின் பெறுமதி அதிகரிப்பு ஆகியன தலா வருமான அதிகரிப்புக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.