Published On: Friday, October 21, 2011
கடாபிக்கு ஐ.நா. விளக்கம் கோரியுள்ளது

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மார் கடாபியின் உடல் அடக்கம் செய்யப்படுவது அவரது உடல் பிரசோதனை செய்யப்படுவது மற்றும் எங்கு அடக்கம் செய்யப்படுவது பற்றிய தீர்மானம் எடுக்கும் வரை தாமதமாகும் என்று லிபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா. மனித உரிமை அலுவலகம் கடாபி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது. கடாபியின் உடல் இஸ்லாமிய வழக்கப்படி இன்று அடக்கம் செய்யப்படும் என்று இடைக்கால நிர்வாகம் அறிவித்திருந்தது. காயங்களுடன் உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பூரண அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இன்று லிபிய இடைக்கால அரசை கோரியுள்ளது.
கடாபியை உயிருடன் பிடித்த இடம்