Published On: Monday, November 21, 2011
34 விரல்களுடன் வாழும் அதிசய சிறுவன்
வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் 15 மாத ஆண்குழந்தை அக்ஸித் சக்சேனா என்ற சிறுவனுக்கு 34 விரல்கள் உள்ளன. பிறக்கும்போதே அக்ஸித்துக்கு கைளிலும் கால்களிலும் வழமைக்கு மாறாக அதிகளவிலான விரல்கள் இருந்தன. இந்த சிறுவனுக்கு இரண்டு கைகளிலும் தலா 7 விரல்கள் வீதம் 14 விரல்களும் கால்களில் தலா 10 விரல்கள் வீதம் 20 விரல்களும் ஆக முப்பத்து நான்கு விரல்கள் உள்ளன. இவன் பிறக்கும்போதே சாதனையுடன் பிறந்த அக்ஸித் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.
விரல்கள் அசாதரண எண்ணிக்கையில் இருப்பதால் அக்ஸித்தால் நிற்கக்கூட முடியவில்லை. இதனால் மேலதிகமான விரல்களை சத்திரசிகிச்சை செய்து அகற்றும்பொருட்டு டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
துருவம் வாசகர்களுக்காக அக்ஸித்துடைய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது