Published On: Wednesday, November 23, 2011
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்பாறை
(எஸ்.எம். அறூஸ்)
அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் அடைமழை பெய்கின்கிறது. வீதிகளில் மழை வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில நாட்கள் மட்டும் பெய்த மழை, சற்று ஓய்ந்துவிட்டு தற்போது மீண்டும் கடந்த 3 பெய்து வருகின்றது. இதனால் அக்கரைப்பற்று பிஸ்கால் வீதி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டு்ள்ளது. நாளாந்த கடமைகளைகளில் மக்கள் ஈடுபடமுடியாமல் அல்லலுறுகின்றனர். வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிஸ்கால் வீதியினை கீழுள்ள படங்களில் காணலாம்.
இந்த வீதி நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யாமலும், வடிகான்கள் இல்லாமலும் இருந்துவந்துள்ளது. அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாஉல்லா அமைச்சராக இருந்தும் இது கவனிப்பாரற்றுக் கிடப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த அடை மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்திலும் பல வீதிகள், வீடுகள் மற்றும் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேசங்களை கீழுள்ள படங்களில் காணலாம்.
அட்டாளைச்சேனையின் ஒரு பிரதேசத்தில் மாடுகளைக் கட்டுகின்ற ஒரு இடத்தில் சாணம் குவிந்துகிடப்பதால் அவை மழைக்காலத்தில் பெரும் அசுத்தமாகி அயலவர்களுக்கு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். அதனை கீழுள்ள படங்களில் காணலாம்.