எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, November 23, 2011

ஹாபிஸ் பட்டம்பெற்ற மாற்றுமத பெண்கள்

Print Friendly and PDF


ஹேமலதா
இந்தியாவின் பீகார் மாநிலம் காகவுல் என்ற நகரில் உள்ள மத்ரஸாவில் இந்த ஆண்டு பட்டம் பெற்ற மாணவி பெயர் ஹேமலதா. இவர் பீகார் மாநிலத்தில் மத்ரஸாவில் பயிலும் முஸ்லிம் அல்லாத பெண்களில் ஹாஃபீஸ் பட்டம் பெற்ற முதல் பெண். அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர். இவர் மட்டுமல்ல இவரின் சகோதரரும் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் பல மதரஸாக்களின் பொறுப்பாளராக உள்ள மௌலானா மஸாருல் – ஹக் அவர்கள் “ஒவ்வொரு ஆண்டும் பல முஸ்லிம் அல்லாத குழந்தைகள் மதரஸாக்களில் சேர்ந்து வருவது பெருமைக்குரியதாக உள்ளது. இவர்கள் கல்வியை முடிக்கும் போது அரசின் உலகியல் பாடங்களில் திறன் பெறுவதோடு அரபு மொழியிலும் திறன் பெற்றவர்களாகவும் அல்குர்ஆனை சரளமாக ஒதியும் பல அத்தியாயங்களை மனனம் செய்தவர்களாகவும் வெளி வருகின்றனர்” என்கிறார்.

அஞ்சலி ராஜ்
18 வயது நிரம்பும் அஞ்சலி ராஜ் என்ற மாணவி 10 வகுப்பு (ஃபவுகானியா) பீகார் மாநில மதரஸா போர்ட் தேர்வில் 805 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியான உடன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து எனது மகளை பார்த்து பேட்டி எடுப்பதற்கு பல பத்திரிகையாளர்கள் வந்தனர் என்று அஞ்சலி ராஜின் தந்தை அஜய் ராஜ் பெருமையோடு கூறுகிறார்.

பீகார் மதரஸா போர்டின் தலைவர் மவுலானா இஜாஸ் அகமது அவர்கள் இந்த ஆண்டு பீகார் மதரஸா போர்ட் பிரிவில் 100 மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். இந்த மாணவர்களின் பெற்றோர் “மற்ற பள்ளிக் கூடங்களை விட மதரஸாக்களில் ஒழுக்கம் போதிக்கப்படுவதால் தங்கள் குழந்தைகளை சேர்த்ததாக கூறுகின்றனர்” என்று மவுலனா இஜாஸ் கூறுகிறார்.

பீகார், உ.பி. வங்காளம், போன்ற மாநிலங்களில் (STATE MADRASSA BOARD) மாநில மதரஸா கல்வி வாரியம் நடத்தும் பாடத்திட்டத்தை மாநில அரசே நடத்துகிறது. இது அல்லாமல் தனியரால் நடத்தப்படும் மதரஸாக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை எல்லாவற்றிலும் தரமான கல்வியும், உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மதரஸா கல்வி வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களில் அரசின் பாடமும் இஸ்லாமிய பாடமும் இணைக்கப்பட்டு கற்றுத்தரப்படுகின்றன.

சில தனியார் நடத்தும் மதரஸாக்களிலும் இதுபோன்ற ஒருங்கிணைந்த கல்வி முறை உள்ளன. மார்க்கக் கல்வி – உலகக்கல்வி இணைக்கப்பட்ட மதரஸாக்களைத்தான் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் தேடிச் செல்கின்றனர். மார்க்க பாடங்கள் மட்டும் கற்பிக்கும் மதரஸாக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்படும் கால ஒட்டத்தை புரிந்து கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை மனித சமூகத்திடம் விதைத்திடும் திட்டத்திற்கே அல்லாஹ்வின் உதவியும் அருளும் கிடைத்திடும் என்பதற்கு இந்த மதரஸாக்களின் வளர்ச்சியும் சாதனையுமே எடுத்துக்காட்டு. தமிழகத்திலும் மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாத மாணவர்களை சேர்த்திடும் காலம் மிக விரைவில் உருவாக வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452