Published On: Monday, November 21, 2011
இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் பேஸ்புக்
பெரமுன ராள லாகே அடுவாவ (පෙරමුණේ රාළගේ අටුවාව) எனும் பெயரில் ஒரு facebook Open Group இருக்கிறது. அதில் முஸ்லிம் மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் கேலி செய்து வருகின்றது. அத்துடன் முஸ்லிம்களினால் புனிதராக மதிக்கப்படுகின்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி செய்யும் வகையில் கார்டூன்களையும் இட்டுள்ளான் (Older post சென்று பார்க்கவும்) இதனை நடாத்துகின்றவன். ஆகவே, இதை ரிப்போர்ட் செய்து Block செய்வது அனைவரினதும் பொறுப்பாகும்.
- http://www.facebook.com/groups/atuwawa/ இங்கே கிளிக் செய்யவும்.
- அந்தப் பக்கத்தில் கடைசியில் உள்ள Report Group என்பதனை கிளிக் செய்யவும்.
- பின்னர் வரும் சிறிய திரையில் Hate speech என்பதனை தெரிவு செய்து choose a type என்பதில் targets a religious group என்பதனை தெரிவு செய்து continue tab பினை கிளிக் செய்யவும் பின்னர் வரும் திரையில் report to face book என்பதனை தெரிவு செய்து continue tab பிணை கிளிக் செய்யவும்.
அண்மைக்காலமாக இஸ்லாத்தை வேண்டும் அவமதிக்கும் வகையில் முஸ்லிம்களின் புனித ஸ்தலமான கஃபத்துல்லாஹ் மீது ஒரு அந்நியப் பெண் அரைகுறை ஆடையுடன் இருப்பதுபோலவும், பன்றி ஒன்று அதில் உறங்குவதுபோலவும், நாய் அதில் மலங்கழிப்பது போலவும் மற்றும் மலங்களை அள்ளிவைத்தது போலவும் மிகவும் கீழ்த்தரமான முறையில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி புகைப்படங்களை எடிட் செய்து அவற்றை பேஸ்புக்கில் உலவ விடுகின்றது ஒரு நாசகாரக் கூட்டம்.
இதன் பின்னணியில் யார் இருக்கின்றனர். ஏன் இவ்வாறு கேவலமான முறையில் செயற்படுகின்றார்கள். இவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்து என்னதான் செய்யப் போகின்றார்கள்...?