Published On: Monday, November 21, 2011
இந்தியாவில் இன்று காலை நிலநடுக்கம்
இன்று காலை 8.47 மணிக்கு இந்தியாவின் வட, கிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அஸாம், நாகாலாந்து மற்றும் மணிபூரிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் மணிபூர் தலைநகர் இம்பாலிலின் கிழக்கில் இருந்து 130 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இந்தியாவின் வட, கிழக்கு மாநிலங்களான அஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிபூர் நில நடுக்கம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளது என்று புவி அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.