Published On: Tuesday, November 22, 2011
கூகுள் பிளஸில் புதியதொரு வசதி அறிமுகம்
கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. கூகுள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது.
தற்போது வரை நமது கூகுள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகுள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதியினை(Chatting) கொண்டு வந்திருக்கிறது.
Chatting வசதியின்றி சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதில்லை தானே. இப்போது இதனையும் கூகுள் பிளஸ் எற்படுத்தியிருக்கிறது.
கூகுள் பிளஸில் நமது வட்டத்திற்குள் இருப்பவர்கள், அவர்களின் வட்டத்திற்குள்ளும் நம்மைச் சேர்த்திருப்பார்கள் என்றால் அவர்களிடம் நாம் எளிதாக சாட்டிங் செய்யலாம். கூகுள் பிளஸ் மூலம் சேர்ந்து நண்பர்களானவர்களிடம் நாம் வேறு இடைமுகங்களான GMail, iGoogle, Google Talk போன்ற இடங்களிலும் சாட்டிங் செய்து கொள்ள முடியும்.
கூகுள் பிளசில் யாரென்று தெரியாத பல நண்பர்கள் நம் வட்டத்திற்குள் இருக்கலாம். அதனால் பல குழப்பங்கள் ஏற்படாதபடி கூகுள் பிளஸ் அடிக்கடி பேசுபவர்களின் பெயரை மட்டும் சாட்டிங் வரிசையில் தற்போது காண்பிக்கும். இருப்பினும் அவர்களது பெயரை Chat Box இல் தட்டச்சிட்டுத் தேடி சாட்டிங் செய்து கொள்ள முடியும்.
மேலும் நமது வட்டத்திற்குள்ளேயே Family, Friends, Relatives என்று பல வட்டங்கள் பிரித்திருப்போம். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே பேசிக் கொள்ள நினைத்தால் Chat என்பதற்கு நேராக உள்ள சின்ன வட்டத்தைக் கிளிக் செய்து Privacy Settings என்பதில் செல்லவும். அதில் Your Circles மற்றும் Custom என்று இருக்கும்.
Your Circles: இதில் உங்கள் வட்டத்திலிருக்கும் எல்லோரிடமும் பேச அப்படியே விட்டு விடுங்கள்.
முக்கிய வசதி: கூகுள் பிளசில் சாட்டிங் வசதி தொந்தரவாக இருப்பின் அதை மட்டும் Sign Out செய்து கொண்டு தளத்தில் தொடரலாம். வேண்டுமெனில் Sign In செய்து சாட்டிங் வசதியில் இருக்கலாம்.