Published On: Tuesday, November 22, 2011
தவறுதலாக சிறுமிக்கு விசர் நாய்கடி ஊசி
இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ள சென்ற சிறுமிக்கு விசர் நாய்க் கடிக்கான ஊசி ஏற்றப் பட்டுள்ள சம்பவம் அநுராதபுர போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்டதால் சிகிச்சைப் பெறுவதற்குச் சென்ற ஆறு வயது பிள்ளைக்கு அந்த ஆஸ்பத்திரியின் ஊசி ஏற்றும் அறைக்கு இரத்த மாதிரியை பெற்றுக் கொள்ள சென்ற வேளையில் அங்கு கட மையாற்றும் தாதியொருவருக்கு வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டுக் கொடுத்த பத்திரத்தை வாசித்துப் பார்த்து பின் விசர்நாய் கடிக்கான ஊசியை பிள்ளையின் ஒரு கையில் ஏற்றியுள்ளார்.
பின்பு 2ஆவது தடவையாக அந்த பிள்ளையின் மற்றைய கைக்கு ஊசியை ஏற்ற தயாராகும்போது தாயார் குழப்படைந்து தாதியரிடம் விசாரித்தபோது தவறொன்று நிகழ்ந்து விட்டதாக தாதி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிள்ளையின் தாய் இது பற்றி பிள்ளையை இரத்தப் பரிசோதனை செய்யுமாறு கூறிய வைத்தியரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பிள்ளைக்கு விசர் நாய் கடிக்கான ஊசி ஏற்றப்பட்டதாக எழுத்தில் தரும்படி பிள்ளையின் தாயார் கேட்டுக் கொண்டபோது அதற்கு வைத்தியர் இனங்கவில்லை. பின்னர் பிள்ளையின் தாயாரான அநுராதபுரம் போதேகமயில் வசிக்கும் ரோகிணி குமாரி இது குறித்து ஆஸ்பத்திரி பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.