Published On: Tuesday, November 22, 2011
கிழக்கில் மீண்டும் வெள்ள அபாயம்
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
கிழக்கில் தற்போது பெய்துவரும் பெருமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் நீரில் மூழ்கியுள்ளது அத்துடன் சம்மாந்துறையூடாக மண்டூர் செல்லும் பிரதான வீதியிலுள்ள வழுக்காமடு கோஸ்வே பிரதேசத்தில் பிரதான வீதியை ஊடறுத்து ஒரு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்து செல்கின்றது.
மேலும் மழை தொடரும் சந்தர்ப்பத்தில் அப்பாதையூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் உள்ளது அதுமாத்திரமன்றி கிட்டங்கி தாம்போதி, மாவடிப்பள்ளி தாம்போதி என்பவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.