Published On: Wednesday, November 23, 2011
கொழும்பில் 'கலிமா' அச்சடித்த கைக்குட்டை
கொழும்பில் 'லாயிலாஹ இல்லல்லாஹூ...' என்ற அரபு வார்த்தை (கலிமா) அச்சடிக்கப்பட்ட கைக்குட்டை கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. என்ன கைக்குட்டையில்தானே அச்சடித்து இருக்கிறது என்று எண்ண வேண்டாம். இது முஸ்லிம்களின் ஒரு புனிதமான வார்த்தை. கைக்குட்டைதான், ஆனால் இக்கைக்குட்டையை நாம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்று சிந்திக்க வேண்டும், இந்த கைக்குட்டை இலங்கையிலே, கொழும்பு மாநகரிலே தற்போது அதிகமான கடைகளில் விற்பனையாகிறது.
இந்த ககைக்குட்டையை வாங்குபவர்கள் கவனமாக பத்திரமாக வைப்பார்களா? பார்ப்பர்களா?. இல்லை, இல்லவே இல்லை. அவசரத்தில் தன்னை மறந்து அந்த கைக்குட்டையால் தனது வியர்வையையும், வாயையும், கையையும்தான் துடைப்பார்கள்.
இலங்கையின் சிந்தனைமிக்க சமுக ஆர்வாளர்களே! எங்கே அவர்கள். இந்த விடயம் அவர்கள் காதுக்கு கிட்டவில்லையா? இலங்கை நாட்டு ஜம்மியியத்துல் உலமா என்ன செய்கிறது? இலங்கை நாட்டு முஸ்லிம் தலைவர்கள் இதனை கவணிக்கவில்லையா? அறிஞர்கள் சற்று எட்டிப் பார்க்ககூடாதா? ஏன் இதனை யாரும் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.