Published On: Monday, November 21, 2011
தபால் சேவை பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
தபால்துறை அமைச்சருடன் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தபால் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
அஞ்சல்மா அதிபரை பதிவி விலக்ககோரி கடந்த 8 நாட்களாக இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வந்தது. இதன் காரணமாக 18 இலட்சம் தபால்கள், கொழும்பு அஞ்சல் தலைமைக் காரியாலயத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
இந்நிலையில், இன்று தபால்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தமது போராட்டம் கைவிடப்பட்டதாகவும் சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.