எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, November 21, 2011

நீதிமன்றங்களை அரசியலாக்க வேண்டாம்

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
நீதிமன்றங் களை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று கூறவும் நீதிமன்றங்களை சுயாதீனமாக இயங்க விடுமாறு கோரவும் பிரஜைகள் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் உரிமை உள்ளது. எனவே, நாங்கள் எல்லோரும் எமது ஜனநாயக உரிமைகளுக்காக கட்சி பேதமின்றி குரல் கொடுக்கவேண்டும் என்று மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டார்.

அடிமை மக்களாக அன்றி பிரஜைகளாவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே தேரர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது. பிரஜைகளின் உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான சட்டத்தரணிகள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் புத்திஜீவிகள் சட்டத்தரணிகள் கலைஞர்கள் என பலரும் உரையாற்றினர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, கொழும்பு மேயர் ஏ.ஜே. எம் முஸம்மில், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு மாதுளுவாவே சோபித தேரர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இந்த நாட்டு மக்களுக்கு நீதிமன்றங்களை சுயாதீனமாக இயங்கவிடுமாறும் கோர பொறுப்பு இருக்கிறது. இன்று எங்களுக்கு செல்ல இருக்கக்கூடிய ஒரே நிறுவனம் நீதிமன்றம் மட்டும்தான். ஆயினும் இன்று நீதித்துறையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் எமது நாட்டில் விடுதலையாகியிருகின்றார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்கள் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்படுகின்றது. சில வழக்குகளுக்கான தீர்ப்புக்களை பார்க்கும்போது சிறிய பிள்ளைகளுக்கும்கூட இந்த தீர்ப்பை வழங்க முடியும். என்று நினைக்கத் தோன்றுகிறது.

இன்று பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்பதில்லை. பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதில்லை. அரசியல் கொந்தராத்து வேலைகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். இன்று படையினரும் கொந்தராத்துக்களை ஏற்கின்றனர். நாங்கள் நாட்டின் பிரஜைகள் அல்ல, எங்களுக்கு உரிமை கிடையாது. இலஞ்சம், ஊழல், வீண்விரயம் நாட்டில் அதிகரித்துள்ளது.

பாராளுமன்றத்தில் அண்மையில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தார்கள் அதை விவாதத்திற்கு எடுப்பதற்கு போதுமானகால அவகாசத்தை பாராளுமன்றத்தில் வழங்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தை சுயாதீனமாக இயங்க விடுமாறுகோர பிரஜைகள் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் உரிமை உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452