Published On: Thursday, November 24, 2011
மாணவர்கள் இடைவிலகளைத் தடுக்கவும்
(எஸ்.எல். மன்சூர்)
பாடசாலைகளில் மாணவர்கள் இடைவிலகள் ஏற்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி அமுலில் உள்ளநிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் மாணவர்கள் இடைவிலகளும் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. இதனைத் தவிர்க்கும் முகமாக பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வறுமை, பெற்றோர் இல்லாத பிள்ளைகள் போன்ற காரணிகள் என தெரியவருகிறது. அத்துடன் அதிகமாக பெருந்தோட்டப்புறப் பகுதிகளிலுள்ள மாணவர்களே இவ்வாறு இடைவிலகிச் செல்கின்றனர். அத்துடன் சாதாரணத்தரப் பரீட்சைக்கு முன்னரும் சில பிரதேசங்களில் மாணவர்கள் இடைவிலகிச் செல்கின்றனர். இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான பிள்ளைகளைக் காணும்பட்சத்தில் அவர்களை பாடசாலையுடன் இணைத்து கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் உதவவேண்டும் என்கிறது கல்வியமைச்சு.