Published On: Sunday, February 19, 2012
தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நான்கு பேர் இணைவு

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் நான்கு பேர் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நேற்று இணைந்து கொண்டுள்ளனர். நுவரெலியா பிரதேச சபையின் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான மலர்வாசகம், கல்யாணகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் அம்பகமுவ பிரதேச சபையின் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினரான டொமினிக் ஆகியோர் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். அத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலவாக்கலை இணைப்பாளர் சுரேஸ் என்பவரும் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டனர்.





