எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள்

Print Friendly and PDF


(நிஸார் ஜமால்தீன்) 
சி.என்.எல்.எப். சமூக விவகார மன்றத்தின் ஏற்பாட்டில் மல்டிலக் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். மக்கீன் அவர்களின் அனுசரணையில் அட்டாளைச்சேனை பிரதேச க.பொ.த (உ/த) விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதுதொடர்பான 3ஆம் கட்ட கலந்துரையாடல் அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. 

அமைப்பின் தலைவர் எம். முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டு மாவட்ட நீதவான் என்.எம்.எம். அப்துல்லாஹ், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாஹீம், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான யு.எம். வாஹிட், எஸ்.எல்.ஏ. றசாக் மற்றும் விரிவுரையாளர் எம்.எச்.எம். மின்வர் அதிபர் எம்.ஐ.எம். சலாம், உப அதிபர் ஏ.எல்.ஏ. பத்தாஹ், அமைப்பின் ஆலோசகர் எம்.ஏ. பௌசுர் ரஹ்மான், செயலாளர் எச்.எம். றிப்னாஸ், பொருளாலர் ஏ.சீ.எம். அஸாம், அமைப்பாளர் ஏ.சீ.எம். றிழா உட்பட மாணவர்களது பெற்றோர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் விஞ்ஞானப்பிரிவு முதலாம் வருட மாணவர்களுக்கான மாலைநேர வகுப்புகள் ஏற்பாடு செய்வதெனவும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான விஷேட மாதிரி வினாப்பத்திர பயிற்சி வழங்குவதெனவும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு இவ்விரு வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டதோடு மேலதிக வகுப்புகளுக்காக கல்முனைக்குச் செல்கின்ற மாணவர்களின் இரவுநேர போக்குவரத்து பிரச்சினையை நிவர்த்தி செய்யும்பொருட்டு இவ்வமைப்பினால் இலவச தனியார் பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சி.என்.எல்.எப். இன் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அட்டாளைச்சேனையின் கல்வி வளர்ச்சியில் புதியதோர் புரட்சியை ஏற்படுத்தக்கூடியதெனவும் வரவேற்கத்தக்க சிறந்த முயற்சி எனவும் பெற்றோர்கள், கல்விமான்கள், கருத்து தெரிவிக்கின்றனர். சி.என்.எல்.எப். அமைப்பிற்கும் மல்டிலக் நிறுவன உரிமையாளருக்கும் இப்பிரதேச கல்விமான்களும் இப்பிரதேச மக்கள் தங்களது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452