Published On: Thursday, March 08, 2012
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க ஜெயலலிதா மீண்டும் கடிதம்


(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியிருப்பதை பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு, ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக கெண்டுவரப்பட உள்ள மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி பிரதமர் மன்மேகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் செயலலிதா இரண்டாம் முறையாக கடிதம் எழுதியிருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் இது தெடர்பான தீர்மானம் முதல்வரால் முன்மெழியப்பட்டு அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பேதும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கேரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஒட்டுமெத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகேளை ஏற்று ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்துகெள்ள வேண்டும் என மீண்டும் வற்புறுத்துகிறேன் என்று இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.