Published On: Thursday, March 08, 2012
இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு பல நாடுகள் எதிர்ப்பு - தமரா


அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு பல நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இப்பிரேரணையானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஓர் நீதிமன்றமாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையின் கடமைகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களே நகல் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகல் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டவை. அந்தப் பரிந்துரைகளில் சில அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சில பரிந்துரைகள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது எனவும் தமரா குணநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.