Published On: Thursday, March 08, 2012
தேசிய விருது; சிறந்த நடிகை - வித்யாபாலன், படம் - வாகை சூடவா

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
59ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக வித்யாபாலன் தேர்வு செய்யப்பட்டார். 'தி டர்டி பிச்சர்ஸ்' என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக இந்த தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிரிஷ்குல் கர்னிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வாகை சூடவா என்ற படத்துக்கு கிடைத்துள்ளது.
இப்படத்தை சற்குணம் இயக்கி உள்ளார். சிறந்த பொழுது போக்கு படத்துக்கான தேசிய விருது அழகர்சாமியின் குதிரை படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இப்படத்தில் நடித்த அப்புகுட்டிக்கு கிடைத்துள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது ஆரண்ய காண்டம் என்ற தமிழ் படத்தொகுப்பாளர் பிரவீணுக்கு கிடைத்துள்ளது.





