Published On: Saturday, November 19, 2011
கடாபியின் மகன் கைதுசெய்யப்பட்டார்
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கேர்ணல் கடாபியின் மகன் ஸையிப் அல் இஸ்லாம் அல்ஜீரிய நாட்டின் எல்லைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அல்-ஜெஸீரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லிபிய தலைநகர் திரிபோலியில் செய்தியாளர் சந்திப்பொன்றில் தளபதி பஷீர் ஜுமா தையீல்பா இச்செய்தியை தெரிவித்துள்ளார். அத்துடன், ஸையிப் அல் இஸ்லாம் சின்டான் நகருக்கு கொண்டு வரப்படுவார் எனவும் மேலும் தெரிவித்தார்.