Published On: Saturday, December 10, 2011
நீர்வேலியில் கணவன், மனைவி வெட்டிக்கொலை

கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
இந்த வெட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். நீர்வேலியை சேர்ந்த 55 வயதுடைய உதயகுமார் மற்றும் 45 வயதான வசந்தமலர் ஆகிய இருவரே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் வைத்தியசாலை சென்று வீடு திருத்பியபோது வீட்டு வளவில் மறைந்திருந்த நபர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.