Published On: Friday, December 09, 2011
2ஆம் நாள் டுவர் டீ ஸ்ரீலங்கா யூத் சைக்கிளோட்டம் நிறைவு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார, திறன்கள் அபிவிவிருத்தி அமைச்சு ஆகிய இணைந்து ஏற்காடு செய்த டுவர் டீ ஸ்ரீலங்கா யூத் தேசிய சைக்கிளோட்டப் போட்டியின் இரண்டாம் கட்டம் நேற்று திஸ்ஸமஹராம சுற்று வட்டத்திற்கு அருகாமையில் காலை 11.40 மணிக்கு நிறைவு பெற்றது.
இரண்டாம் கட்டம் நேற்றுக் காலை சியம்பலாந்துவை நகரத்தில் வைத்து ஆரம்மானது. இப்போட்டியை அனைத்து வீரர்களும் 3 மணித்தியாலம் 1 நிமிடம் 53 செக்கனில் ஓடி முடித்தனர். போட்டியின் இரண்டாம் கட்டத்தில் முதலிடத்தை, இரண்டாமிடத்தை இலங்கை விமானப்படை வீரர்கள் பெற்றுக்கொண்டர். மூன்றாமிடத்தை கடற்படை வீரர் பெற்றுக்கொண்டார்
மட்டக்களப்பில் 8ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டி 2 மணித்தியாலம் 53 செக்கனில் 125 கிலோமீட்டர் ஓடி முடித்தனர். போட்டியின் இரண்டாம் கட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற ஜீவன ஜயசிங்க முதல் நாளில் 22 இடத்தைப் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது நாளில் 44 இடத்தை பிடித்தவர் நேற்று இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார். இதேவேளை, முதல் நாளில் 15 ஆவது இடத்தைப் பிடித்தவர் இரண்டாம் கட்டததில் 3ஆம் இடத்தை தட்டிக் கொண்டவர் என்பது இங்கு முக்கிய அம்சமாகும்
இதேவேளை நாளை இறுதிப் போட்டி திஸ்ஸமஹாரமவில் இருந்து ஆரம்பிக்கும் போட்டி 111 கிலோமீட்டர் தூரம் சென்று மாத்றையை சென்றடையும்.