Published On: Saturday, December 31, 2011
முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு - யாழ் மாநகர சபையில் ஒலித்தவை
(செங்கதிரான்)
யாழ். மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர் திருமதி கேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை பற்றி பேசினார். அந்த உரையை இடைமறித்த புலிசார்பு உறுப்பினர்கள், இந்த உரை இனரீதியான பாகுபாட்டுடன் புலிகளை குற்றஞ்சாட்டுவதாக அமைந்துள்ளது என்று உரையை இடைமறித்து குழப்பினர். இந்தப் பிரேரணையை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.றெமிடியஸ் கூச்சலிட்டார். எதிர்கட்சி உறுப்பினர் சங்கையா, இது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம் எனக் குற்றம் சாட்டினார்
ஆளும் தரப்பு உறுப்பினர் நிஷாந்தன், ‘இது ஜனநாயகப் பண்புகள் அற்ற ஈ.பி.டி.பி.யின் அறிக்கை மாதிரி இருக்கிறது’ எனக் கூறி இந்த பிரேரணையை சபையில் கிளித்து எறிந்தார். இந்தச் செயற்பாட்டை அடுத்து சபை 30 நிமிடங்கள் குழப்பத்தில் மூழ்கியது அதன்போது மிகவும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது .
புலிகள் கௌரமானவர்கள் அவர்களைக் குற்றம் சொல்வதற்கு இங்கு நாம் யாரையும் விடமாட்டோம் என சபையில் எதிரணி உறுப்பினர் விந்தன் தெரிவித்தார். விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார்.
இதில் தலையிட்ட மாநாகர முதல்வர் ஜனநாயகப் பண்புகளோடு நடந்து கொள்ளும்படி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன் ‘இந்த சபையில் உண்மையில் யார் முதல்வர்? யோகேஸ்வரியா, விஜயகாந்தா? என கேள்வி எழுப்பியவுடன் சபையில் அமர்ந்திருந்நத விஜயகாந் ஆளும் உறுப்பினர் நிஷந்தனைத் தாக்கத் தொடங்கியதுடன் ஆளும் தரப்பிற்கிடையில் மோதல் வெடித்தது.
குறிப்பு: இந்த மனோ நிலையிலுள்ளவர்களுடன்தானா நமது கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்துவது. நாளை இவர்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் கிடைத்துவிட்டால் பார்க்கவும் வேண்டுமா என்ன? கடந்தகாலத் தவறுகள் என்று எத்தனை வருடங்கள்தான் ஓடிவிட்டன. இன்று யாழ்ப்பாணம் சென்று முஸ்லீம்கள் வாழும் தெருக்களைப் பார்வையிட்டாலே கண்ணால் செந்நீர்தான் வரும். அந்தமக்கள் இன்றும்கூட படுகின்ற வேதனைகள், துன்பங்கள் ஆயிரமாயிரம் கதை சொல்லும். அதுமட்டுமல்ல அங்குள்ளவர்களின் காணிகளை விலைக்கு வாங்குகின்ற ஒரு நிலையும் காணப்படுகிறது.
உங்களுடையவர்கள் அனைவரும் வெளியேறி புத்தளம், கொழும்பு போன்ற பிரதேசங்களில்தானே குடியிருக்கின்றார்கள். நீங்களும் அங்கு போவதுதான் சரி என்று ஆசை வார்த்தைகள் கூறி எப்படியும் காணிகளை கபளீகரம் செய்கின்ற ஒரு போக்கும் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவ்வாறான பேச்சுக்கள், கொலைவெறி வார்த்தைகள் தமிழ்பேசும் மக்களிடையே இனதூபத்தை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் அறிந்திருந்தும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.
கடந்தகாலங்களில் முஸ்லீம்கள் இவர்களது அடிதடிகளால் பட்ட துயர் போதாதென்று சொல்லாலும் கொடுக்கின்றார்கள் அடிதடி. இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. முஸ்லீம் அரசியல் வாதிகள் ஒற்றுமைப்பட்டு இவர்களின் செயற்பாடுகளுக்கு தக்கபதில் கொடுக்க வேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கின்றோம். நாம் என்ன கிள்ளுக் கீரைகளா? நமது நாடு, நமது நிலம், நமது பூர்வீகம் இரு இனத்திற்கும் உறவுப்பாலமாய் இருந்து வரும் எம்மீது ஏன்தான் இவ்வாறு சேறு பூசுகின்றார்கள். கடந் காலங்களில் இவர்களது துன்பங்களில் நாம் பங்கெடுத்தோமே இதற்கு இவர்கள் காட்டும் அக்கரை இதுதானா?
எனவே, இந்த யாழ்ப்பான நிகழ்வுகளை சரியான முறையில் ஆய்ந்தறிந்து முஸ்லீம் தலைவர்கள் உடனடியான பதிலை வழங்க வேண்டுமென மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
(இதற்கான கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்)