Published On: Saturday, December 31, 2011
ஜனவரி 15 முதல் மீண்டும் பிளாஸ்டிக் கூடை கட்டாயம்
(பஹமுன அஸாம்)
மரக்கறிகள் மற்றும் பழவகைகளை கொண்டு செல்லும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் நடவடிக்கை மீண்டும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்த அரசு திர்மாணித்துள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் தொடர்பான விடயங்கள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று விரைவில் வெளியிடப்படவுள்ளது.
கடந்த டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து பிளாஸ்டிக் கூடைகளின் பாவைனை கட்டாயமாக்கப்பட்டிருந்த போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இத்திட்டம் ஒரு மாதகாலத்தால் பிற்போடப்பட்டது.
விவசாயிகள் மற்றும் வியாபாரச் சங்கங்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் சில மரக்கறி வகைகள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தில் உள்ளடங்கும் மரக்கறி, பழவகைகள் அடங்கி புதிய சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
மேலும் விசாய அமைப்புக்களுக்கு இக்கூடைகள் இலவசமாக வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 13,000 விவசாய அமைப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுக்கு தேவையான கூடைகளின் அளவுகளை குறிப்பிட்டு அனுப்புமான விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.