Published On: Tuesday, December 27, 2011
ஈகாஸ் சர்வதேச பாடசாலையின் பரிசளிப்பு விழா
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை ஈகாஸ் (ECAS) சர்வதேச பாடசாலையின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் அண்மையில் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் எம்.எஸ் காரியப்பர் மண்டபத்தில் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ. நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் மார்பு நோய்பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.எம்.நௌஷாட், வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அசாப், கணக்காய்வு அத்தியட்சகர் அமீர்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.