Published On: Tuesday, December 27, 2011
அடுத்தாண்டிலிருந்து கல்வியில் மாற்றங்கள் ஏற்படும் - பந்துல குணவர்த்தன

(நமது செய்தியாளர்)
கல்வித்துறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் வகையில் புதிய கல்விச் சட்டங்கள் அடுத்தாண்டு மே மாதளவில் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அண்மையில் கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபம் ஒன்றில் தெரிவித்தார்.
இதன் ஊடாக நவீன உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவாறு கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். கல்வி உயரதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்;கையில் கல்வியின் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்த இது பயன்படும். அரதுறையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மீள் நியமனத்தில் அமைச்சரவை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. என்றும் தெரிவித்தார்.